பெங்களூர் விமான நிலையத்தில் மும்பை செல்லும் விமானத்தில் ஒருவரின் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு இளம்பெண் போன் மூலம் பேசியதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்குப் பிறகு அந்தப் பெண்ணையே கைது செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்துக்கு ஒரு பெண் போன் செய்து மும்பை செல்லும் விமானத்தில் மிர் ராசா மெஹ்தி என்பவரின் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
அதோடு அந்த நபர் தனது காதலன் என்றும் குறிப்பிட்டார். உடனே விமானக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மிர் ராசாவை பிடித்துச்சென்று அவரது பேக்கை சோதனை செய்தனர்.
ஆனால், பேக்கில் எதுவும் இல்லை. இதனால் போன் அழைப்பு வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்த பெண்ணின் பெயர் இந்திரா ராஜ்விர் என்றும் அவர் புனேயை சேர்ந்தவர் என்றும் அவரும், மிர் ராசாவும் பெங்களூருவில் பணியாற்றுவதாகவும் தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் மும்பை செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தனர்.
விமான நிலையத்தில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே மிர் ராசா கிளம்பி விமானத்தில் ஏறுவதற்காக சென்றார். இதனால் கோபம் அடைந்த மிர் ராசாவின் காதலி இந்திரா, மும்பை செல்வதைத் தடுக்க அவரது பேக்கில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்ததாகத் தெரிவித்தது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திராவை பிடித்துச் சென்று போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்!
பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?
டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி பரப்புரை நிறைவு முதல் மணிப்பூருக்கு ராகுல் பயணம் வரை!
பியூட்டி டிப்ஸ்: புழுவெட்டால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்… தீர்வு இதோ!