பிரபலமான இந்திய மசாலா பிராண்டான எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் மனித நுகர்வுக்கான பாதுகாப்பான வரம்புகளை மீறும் பூச்சிக் கொல்லியான எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்டதன் விளைவாக, நுகர்வோரைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயப் பொருட்களை பூச்சிகள் பாதிக்காமல் இருக்க எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது. இது நேரடி வீட்டு உபயோகத்துக்கு மிகவும் ஆபத்தானது. பொதுவாக நுகர்வோருக்கு அறிமுகமில்லாதது என்றாலும், பல நுகர்வோர் பொருட்கள் மற்றும் நுகர்வோர் அல்லாத ரசாயனங்கள் மற்றும் இடைநிலைகளை தயாரிப்பதற்கு எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்தப்படுகிறது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை எத்திலீன் ஆக்சைடை உணவில் சேர்க்கக்கூடாது. காரணம், குறுகிய காலத்தில் தனிநபர்கள் சுவாச பிரச்சினைகள், தலைவலி, குமட்டல், வாந்தி அல்லது சயனோசிஸ் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
மேலும், இனப்பெருக்கப் பிரச்சினைகள், உணர்திறன் மற்றும் பிறழ்வு மாற்றங்கள் போன்ற பல்வேறு நாட்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்பதால் சிங்கப்பூர் உணவு நிறுவனம் உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், பிரபலமான இந்திய மசாலா பிராண்டான எவரெஸ்டின் மீன் கறி மசாலாவில் மனித நுகர்வுக்கான பாதுகாப்பான வரம்புகளை மீறும் பூச்சிக் கொல்லியான எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்டதன் விளைவாக, நுகர்வோரைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக, சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA), இந்த மசாலாவை இறக்குமதி செய்த எஸ்.பி.முத்தையா மற்றும் சன்ஸ் லிமிடெட் கம்பெனியிடம் இந்த மசாலா பாக்கெட்டுகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: மீன்பிடி தடை காலத்தில் நல்ல மீன்கள் வாங்குவது எப்படி?
தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்
தளபதிய விட தலவிதி முக்கியம் பிகிலே : அப்டேட் குமாரு
வேட்டையாடிய புலி… கண்முன்னே குட்டியை பறிகொடுத்த தாய் யானை!