கேரள மாநிலத்தில் காதலன் ஷாரோனை விஷம் வைத்து கொன்ற கன்னியாகுமரியை சேர்ந்த கரீஷ்மா என்ற 24 வயது இளம் பெண்ணுக்கு நெய்யாற்றின்கரா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கரீஷ்மா கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்ததால், ஷாரோன் மருத்துவமனையில் உயிருக்கு 11 நாள்கள் போராடினார். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உறுப்புகளும் செயல் இழந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 11 நாட்களும் சொல்ல முடியாத அளவுக்கு ஷாரோன் கொடுமைகளை அனுபவித்ததாக அவரின் தந்தை ஜெயராஜ் வேதனையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,’ செடிகளுக்கு அடிக்கும் கடுமையான விஷம் நிறைந்த பூச்சி மருந்தை கலந்து எனது மகனுக்கு கரீஷ்மா கொடுத்துள்ளார். இதனால், அனைத்து உறுப்புகளுமே செயல் இழந்து கொண்டிருந்தன. அந்த தருணத்தில் ஷாரோன் கடும் வலியுடன் இருந்தான். 11 நாளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட அவனால் குடிக்க முடியவில்லை. குடல் உள்ளிட்ட உறுப்புகள் அழுகி போக தொங்கின. ஆணுறுப்பில் இருந்து கூட ரத்தம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் கண் முன்னரே எமனிடம் அவன் சரணடைந்தான். கடைசியாக அவர் என்னிடத்தில், ’நான் தப்பு செய்து விட்டேன் அப்பா, உங்களிடம் இருந்து எல்லாவற்றையும் மறைத்ததற்காக மன்னித்து கொள்ளுங்கள்’ என்றான்.
கரீஷ்மா ஸ்லோ பாய்சன் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல முடிவு செய்துள்ளார். அதனால், கொஞ்சம் கொஞ்சமாக அவன் உயிர் போய் கொண்டிருந்தது. மலம் கருப்பு நிறத்தில் சென்றது. எச்சில் கூட ரத்தமாகி போனது. என் மகனின் இறப்பு மிக கொடூரமாக இருந்தது” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.