அமெரிக்கா அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் பல நாடுகளுக்கு ஏதாவது பிரச்னையை கொடுத்து கொண்டிருக்கிறார். உக்ரைன் நாட்டு அதிபரை ஓவல் அலுவலகத்துக்கு அழைத்து பின்னர், அவரை அங்கிருந்து வெளியேற சொன்ன சம்பவமும் சமீபத்தில் நடந்தது.
உக்ரைனில் கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது. இதனால், கனிம வளங்கள் உள்ளிட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஜெலன்ஸ்கியை அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது. இதுவரை உக்ரைனுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவழித்துள்ளது. இதற்கு பதிலாக உக்ரைனிடம் ரூ.43 லட்சம் கோடி மதிப்பிலான கனிமங்களை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார்.EU spend 800 billion for military
சில நாட்களுக்கு முன், அதற்கேற்ற வகையில், அமெரிக்கா ஒப்பந்தம் ஒன்றை தயார் செய்தது. அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க முயன்றார்.

அந்த ஒப்பந்தத்தில் ‛ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்கா உதவி செய்து வருகிறது. பல லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக உக்ரைனில் உள்ள கனிமங்களில் 50 சதவிகிதத்தை அமெரிக்கா எடுத்து கொள்ளும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து ஆடிப் போன ஜெலன்ஸ்கி ஒப்பந்தத்தில் கையொப்பமிட மறுத்து விட்டார்.தொடர்ந்து, வாஷிங்டனுக்கு வந்த போது, கனிம வள ஒப்பந்தத்தில் ஜெலன்கியை கையொப்பமிட வைக்க வேண்டுமென்பது அமெரிக்காவின் திட்டமாக இருந்தது.
2024 உலக பொருளாதார மன்ற அறிக்கையின்படி உக்ரைனில் பல அரிய வகை கனிமங்கள் நிறைந்துள்ளன. பெர்லியம், மாங்கனீஸ், யுரேனியம், ஜிர்கோனியம், கிராபைட், புளுரைட், நிக்கல் , லித்தியம், டைட்டேனியம் என கனிமங்கள் உக்ரைனில் குவிந்து கிடக்கிறது. இவை அனைத்தும் பாதுகாப்பு துறை, தொழில்நுட்பத் துறை, எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்திக்கு தேவையான கனிமங்கள் ஆகும்.
ஐரோப்பாவில் காணப்படும் 34 கனிமங்களில் 22 உக்ரைனில் கிடைக்கிறது. உலகில் அதிகமான அரிய வகை கனிமங்கள் கொட்டி கிடக்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 44 மில்லியன் டன் கனிம வளங்கள் பிரேசில் 21 மில்லியன் டன்களுடனும் இந்தியா 6.9 மில்லியன் டன்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். அரிய வகை கனிமங்களை அமெரிக்கா சீனாவிடத்தில் இருந்துதான் 70 சதவிகிதம் இறக்குமதி செய்து வருகிறது . அதனாலேயே, உக்ரைன் கனிமவளங்களை குறி வைத்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.EU spend 800 billion for military
தற்போது, அடுத்ததாக டொனால்ட் டிரம்பின் குறி, கனடா மீது விழுந்துள்ளது. பல தேவைகளுக்காக அமெரிக்கா கனடாவை நம்பியே உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் கனடா நாள் ஒன்றுக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. அதே போல நாள் ஒன்றுக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவுக்கு கனடா ஏற்றுமதி செய்துள்ளது. அதுமட்டுமல்ல , மின்சாரத்துக்கு அமெரிக்கா கனடாவையே நம்பியுள்ளது. ஆண்டுக்கு கனடா சுமார் 53 டெராவாட் மின்சாரத்தை அமெரிக்காவுக்கு அனுப்புகிறது.
இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணாமாக்க வேண்டுமென்று டிரம்ப் கூறி வருகிறார். கனடாவும் அமெரிக்கா போன்று பரப்பளவில் மிக பெரிய நாடு. உலகிலேயே ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பரப்பளவில் பெரிய நாடு. அமெரிக்காவை விட பெரிய நாடு. அவ்வளவு பெரிய நாட்டையை தங்கள் மாகாணாமாக்க போவதாக டிரம்ப் அசால்ட்டாக பேசி வருகிறார்.

ஆனால், கனடாவில் அரசியல் ரீதியாக ஜஸ்டின் ட்ரோடா பிரதமராக இருந்தாலும், கனடாவின் உண்மையான தலைவர் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ்தான். கனடா காமன்வெல்த் அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது. அதோடு, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் உறுப்பினராக உள்ள Five Eyes intelligence கூட்டமைப்பிலுள்ள 5வது உறுப்பினராக இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணாமாக்குவேன் என்று சூளுரைத்து கொண்டிருக்கும் ட்ரம்புக்கு பிரிட்டன் மன்னர் சால்ஸ் எதிர்ப்பு தெரிவிக்காதது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் சார்லஸ் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பிரிட்டன் பிரதமர் மற்றும் கனடாவிலுள்ள பிரிட்டன் மன்னரின் பிரநிதியான ஆளுநர் மேரி சைமனும் அமைதி காப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.EU spend 800 billion for military
எனினும், கிங் சார்லஸ் டொனால்ட் ட்ரம்ப்பை ஸ்காட்லாந்துக்கு அரசு முறை பயணம் வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, இருவரும் கனடா விவகாரம் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதுஎன்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனா, மெக்சிகோ, இந்தியா, கனடா போன்ற நாடுகளிடம் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. ஐரோப்பிய யூனியனிடமும் மோதத் தொடங்கியுள்ளார். திடீரென்று ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது . அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கிறேன்.
பொருளாதார ரீதியாக அவர்கள் நம்மை ஏமாற்றிய காரணத்தால் இந்த நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் இருந்து கார், மின்னணு பொருட்கள், விவசாய பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. எனினும், ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஐரோப்பிய யூனியனும் கூறியிருப்பதால் வர்த்தக உறவில் பிளவு ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ட்ரம்பின் அதிரடியை தொடர்ந்து, ஐரோப்பியன் யூனியன் தலைவர் Ursula von der Leyen ஐரோப்பிய உறுப்பினர் நாடுகள் 841 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு ராணுவ பலத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்கிற திட்டத்தை முன் வைத்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜிலன்ஸ்கியுடன் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் நடந்து கொண்ட விதத்தையடுத்து உடனடியாக நார்வே தலைநகர் பிரஸ்ஸல்ஸிவ் ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளை சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஐரோப்பிய நாடுகள் தங்களது ராணுவ பலத்தை அதிகரித்து கொள்ள வேண்டுமென்றும் உர்சுலா கோரிக்கை விடுத்தார். மேலும், நேட்டோ அமைப்பில் இருந்தாலும் அமெரிக்காவை இப்போது நம்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனை தவிர பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.nd 800 billion for military
ஓவல் அலுவலகத்தில் ஜெலன்ஸ்கியின் நடவடிக்கையால் 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், உண்மையில் ட்ரம்பின் தற்போதைய நடவடிக்கைகள்தான் 3வது உலகப் போருக்க வழிவகுக்குமோ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.