அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வா? – மத்திய சுகாதாரத்துறை விளக்கம்!

Published On:

| By Selvam

இந்தியாவில் 500 அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவிகிதம் அளவுக்கு உயரும் என வெளியான தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகளுக்கான விலை நிர்ணய ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் சந்தை விலைக்கு ஏற்ப ஒவ்வோர் ஆண்டும் மிகக்குறைந்த அளவில் விலை ஏற்றத்தை அறிவிக்கும். உதாரணமாக ரூ.90 முதல் ரூ.261 விலையிலான மருந்துகளுக்கு 0.00551 சதவிகிதம் விலை உயர்வு நடப்பாண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சில செய்தி நிறுவனங்களில், 500-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு 12 சதவிகிதம் அளவுக்கு விலை உயர்த்தப்பட உள்ளதாக செய்தி வெளியானது. குறிப்பாக அத்தியாவசிய  500  மருந்துகள் விலைகள் கடுமையாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வருபவர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, இதய நோய் மருந்துகளை உட்கொள்பவர்கள் கலக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த தகவலுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 12 சதவிகிதம் அளவுக்கு விலை உயர்வு என்பது தவறானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு 0.1 பைசாவுக்கும் குறைவாகவே இருக்கும் என சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகளை வாங்குவோர் அச்சப்பட தேவையில்லை எனவும் இதன் விவரங்கள் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளத்தில் www.nppaindia.nic.in கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: நரையை மறைக்க மருதாணிப்பொடியைப் பயன்படுத்தாதீர்கள்!

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு முள்ளங்கி சட்னி

“தமிழ்நாட்டை பார்த்தால் நக்கலா?” : திருவண்ணாமலையில் மோடி, நிர்மலாவை விளாசிய ஸ்டாலின்

தமிழகத்தில் மின் நுகர்வு புதிய உச்சம்: தங்கம் தென்னரசு தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.