EPF interest rate increased

பி.எஃப் வட்டி விகிதம் அதிகரிப்பு!

இந்தியா

பி.எஃப். வட்டி விகிதம் தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 24) வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அனைத்து அமைச்சகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், 1952 ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் 60(1) இன் கீழ் தொழிலாளர்களுக்கான பி.எஃப். வட்டி விகிதம் 8.15 சதவீதமாக 2022 – 23 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே இதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பி.எஃப் தொகைக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக  உள்ள நிலையில்,  2022 – 23 ஆம் ஆண்டு 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

காதல் விவகாரம்… இளைஞர் வெட்டிக் கொலை: தீவிர விசாரணை!

“ரூ.1000 திட்டம் – சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” : ஸ்டாலின் பேச்சு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *