தொழிலாளர்கள் தங்களின் வருங்கால வைப்பு நிதியை இனி ஏடிஎம் மூலமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சூர் மண்டவியா தெரிவித்துள்ளார். EPF 3.0 Withdrawal Cash via ATM
தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் தெலங்கானா மண்டல அலுவலகம் மற்றும் ஹைதராபாத் அலுவலகம் ஆகியவை நேற்று (மார்ச் 7) திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்சூக் மண்டவியா, “விரைவில் EPFO 3.0 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஒரு வங்கியை போல் மாறும்.
அனைத்து பரிவர்த்தனைகளும் இனி வங்கிகளில் மேற்கொள்வது போல் இருக்கும்.
EPFO சந்தாதாரர் இனி யுனிவர்சல் அக்கௌன்ட் நம்பர் (UAN) மூலம் பரிவர்த்தனை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

இனி EPFO தொடர்பான எல்லா வேலைகளையும் உங்களாலேயே செய்ய முடியும். EPFO அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை. இது உங்கள் பணம். நீங்கள் விரும்பும் போது அதை எடுத்துக் கொள்ளலாம். வரும் நாட்களில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஏடிஎம்களிலிருந்து உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
EPFO 3.0 என்பது தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் நவீனப்படுத்தப்பட்ட ஒரு பதிப்பாகும். தொழிலாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும் அதிகார தடைகளை நீக்குவதற்காகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வைப்பு நிதியிலிருந்து பயனாளிகள் பணத்தை எடுக்க பல கட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. EPF 3.0 Withdrawal Cash via ATM
நீண்ட நடைமுறைகளோடு பிஎஃப் பணத்துக்காக நீண்ட நாட்களும் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டம் மூலம் அனைத்து நடைமுறைகளும் நீக்கப்பட்டு பணப்பரிமாற்றம், ஓய்வூதியத்தை திரும்ப பெறுதல், பணம் எடுத்தல் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இத்திட்டம் மே அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
