OLA Electric Showroom: கர்நாடகாவில் ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காத ஆத்திரத்தில், வாடிக்கையாளர் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஷோரூமை தீ வைத்து கொளுத்தியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தின் கலபுர்கி மாவட்டத்தின் நிகழந்துள்ளது.
கலபுர்கி மாவட்டத்தை சேர்ந்த முகமது நதீம் என்ற 26 வயது இளைஞர், அப்பகுதியில் உள்ள ஒரு ஓலா எலக்ட்ரிக் ஷோரூமில் இ-ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார்.
20 நாட்களுக்கு முன்னேயே முகமது நதீம் அந்த ஸ்கூட்டரை வாங்கியதாக கூறப்படும் நிலையில், அந்த இ-ஸ்கூட்டரில் வாங்கிய நாளில் இருந்தே ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்ட வண்ணமே இருந்துள்ளது. இதன் காரணமாக, அந்த பிரச்னைகளை சரி செய்ய, முகமது நதீம் தினமும் கடைக்கும் வீட்டிற்கும் அலைந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மிகவும் அதிருப்தி அடைந்த நதீம், தனது இ-ஸ்கூட்டரில் முறையாக பழுது நீக்கவில்லை என ஷோரூம் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதை தொடர்ந்து, அந்த வாக்குவாதம் நிகழ்ந்த அடுத்த நாள் காலை ஷோரூமை திறப்பதற்கு முன்னதாக, பெட்ரோலை வாங்கி வந்து ஷோரூம் மீது ஊற்றி கொளுத்திவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், ஓலா ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
இந்த சம்பவத்தில் 6 புதிய ஓலா ஏ-ஸ்கூட்டர்களுடன் சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை முதலில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணையை துவங்கியது.
ஆனால், அடுத்தடுத்த நடத்தப்பட்ட விசாரணைகளில், முகமது நதீம் கடைக்கு தீ வைத்ததை கண்டறிந்தது. இதை தொடர்ந்து, முகமது நதீமை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
2024 ஆசியன் சாம்பியன்ஸ் ட்ரோபி: ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்திய அணி!
150 ஏக்கரில் திருவள்ளூரில் விரைவில் திரைப்பட நகரம்: அமைச்சர் சாமிநாதன்