பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இன்று (அக்டோபர் 20) ராஜினாமா செய்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 47 வயதான லிஸ் ட்ரஸ் சமீபத்தில் பதவியேற்றார்.
இதனை தொடர்ந்து கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மினி பட்ஜெட்டில் பல வரிக்குறைப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த திட்டங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. அத்துடன் நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின.
இதற்கு அவரது சொந்தக்கட்சி எம்.பி.க்களே அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தன் மீது நெருக்கடி அதிகரிப்பதை உணர்ந்த லிஸ் ட்ரஸ் இன்று திடீரென பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவியேற்ற 45 நாட்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் லிஸ்ட்ரஸ். இதன்மூலம் இங்கிலாந்தின் வரலாற்றிலேயே மிக குறுகிய காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெயரை லிஸ் ட்ரஸ் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியான உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவர்மன் நேற்று ராஜினாமா செய்தார்.
அடுத்த வார இறுதியில் இங்கிலாந்தில் புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரதமர் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள சூழ்நிலையில் இங்கிலாந்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜெ. மரணம்: ஜெ. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சிடம் விசாரணை சாத்தியமா?
தமிழ்நாட்டில் மூக்கை மட்டுமல்ல, தலையையும் நுழைப்பேன்: தமிழிசை அதிரடி!