தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

Published On:

| By Kavi

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (மே 9) அமலாக்கத் துறை தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தில், “தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ அல்ல.

ஒரு அரசியல்வாதி ஒரு சாதாரண குடிமகனை விட உயர்ந்த அந்தஸ்தைக் கோர முடியாது. தேர்தல் பிரச்சாரத்துக்காக எந்த அரசியல் தலைவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதில்லை. அதுமட்டுமின்றி அவர் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரும் இல்லை.

அப்படி இருந்தாலும், போட்டியிடும் வேட்பாளருக்குக் கூட பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது. தேர்தல் அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால், அது அனைத்து நேர்மையற்ற அரசியல்வாதிகளும் குற்றம் செய்யத் தூண்டுவதற்கு முன்னுதாரணத்தை உருவாக்கும். தேர்தல் போர்வையில் விசாரணை தடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.

முன்னதாக டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா, “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது. அவர் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். தேர்தலைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப் பரிசீலிக்க உள்ளோம். ஆனால், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று தெரிவித்திருந்தனர்.

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக நாளை (மே 10) உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று ED எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இந்திரா காந்தியின் சாயல்…பிரியங்காவின் அரசியல் எழுச்சி…உத்திரப் பிரதேசத்தில் மீண்டெழுகிறதா காங்கிரஸ்!

“மண்ணாங்கட்டி” ஷூட்டிங் ஓவர்: கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment