மாஸ் லீவ் எடுத்த ஊழியர்கள்… மாஸ் டிஸ்மிஸ் செய்த ஏர் இந்தியா
ஒரே நாளில் மொத்தமாக விடுப்பு எடுத்ததை அடுத்து 25 ஊழியர்களை அதிரடியாக இன்று (மே 9) பணி நீக்கம் செய்தது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் நாளொன்றுக்கு 360 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று திடீரென விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் இந்தத் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் நிறுவனத்தின் சுமார் 90 விமான சேவைகள் பாதிப்படைந்தன.
அதன் தொடர்ச்சியாக அந்நிறுவன ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் விடுப்பு எடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தால் சென்னை-மும்பை ஏர் இந்தியா, சென்னை-கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நெருக்கடி எழுந்த நிலையில், ஒரே நாளில் விடுப்பு எடுத்த ஊழியர்கள் 25 பேரை விதிகளை மீறியதாக கூறி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் விமான சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்க அடுத்த சில நாட்களுக்கு குறைவான விமானங்களை இயக்குவோம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Gold Rate: வெயிலும் குறையுது… தங்கம் விலையும் குறையுது… எவ்வளவு தெரியுமா?
”அமிதாப் பச்சனுக்குப் பிறகு நான் தான்” : கான்களை வம்பிழுக்கும் கங்கனா