டெஸ்லா நிறுவன சி.இ.ஓ. எலான் மஸ்க் நாளை (ஏப்ரல் 21) பிரதமர் மோடியை சந்திக்க இந்தியா வருகை தர இருந்த நிலையில், அந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டெஸ்லா கார் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க மத்திய அரசு முயற்சி செய்தது. இந்தநிலையில், எலான் மஸ்க் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது, 20 பில்லியன் டாலர் வரை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.
குறிப்பாக, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை எலான் மஸ்க் தொடங்க திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நாளை பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்திக்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்க் – மோடி சந்தித்துப் பேசுவது நடுத்தர வர்க்கத்தினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக கணித்திருந்தது. இந்தநிலையில், எலான் மஸ்க் வருகை ரத்தானதால் மோடியின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “சில தவிர்க்க முடியாத காரணங்களால் எனது இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது; விரைவில் இந்தியா வர உள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ப்ளூ சட்டை மாறனுக்கு கண்டனம் – நடிகர் விஜய் ஆண்டனி காட்டம்..!!