தன் அனுமதியில்லாமல் புதிதாக யாரையும் வேலைக்குச் சேர்க்கக்கூடாது என்று தன்னுடைய டெஸ்லா கார் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு நிறுவனத்தின் நிதி நிலைமையை அதிகரிக்க எலான் மஸ்க் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக ஊழியர்களின் பணி நீக்கம், ப்ளூ டிக்குக்குக் கட்டணம் விளம்பரப் பிரிவில் மாற்றம் எனப் பல அதிரடி முடிவுகளை களமிறக்கினார்.
எலான் மஸ்கின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அடுத்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கின் மின்சார கார் நிறுவனமான டெஸ்லா கடந்த காலாண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வருமானத்தையே பெற்றுள்ளது.
போட்டி அதிகரித்துள்ளதால் டெஸ்லா கார்களில் விலையையும் குறைத்து வருகிறது.
எனவே, தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்குச் சேர்க்கக் கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
“வாரந்தோறும் புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்க அனுமதி வேண்டுமென நிர்வாகத்தினர் எனக்கு மெயில் அனுப்புகின்றனர்.
ஆனால், என் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் யாரையும் சேர்க்கக்கூடாது. எனது அனுமதி மெயில் இல்லாமல் டெஸ்லாவில் ஒரு காண்டிராக்டர் கூட சேர்க்கக்கூடாது” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
”ஓபிஎஸ் உடன் இணைந்ததற்கு எடப்பாடி பதறுகிறார்”: டிடிவி தினகரன்
கள்ளச்சாராய மரணம்: ஒரே நாளில் குற்றவாளி மீது குண்டாஸ்! என்ன நடந்தது?
கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை மீன்
திருப்பதி: இனி மாதந்தோறும் 24ஆம் தேதி ரூ.300 தரிசனத்துக்கு முன்பதிவு!