உலக பணக்காரர்கள்: இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்

Published On:

| By Minnambalam

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு எலான் மஸ்க் தள்ளப்பட்டுள்ளார்.

உலக அளவில் பணக்காரர்களாக உள்ளவர்களின் தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த எலான் மஸ்க் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளார்.

இவரை விட, லூயிஸ் விட்டன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பெர்னார்டு அர்னால்ட் என்பவர் அதிக சொத்து மதிப்புடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன்படி இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 30,866 கோடி ஆகும். இது ஏறக்குறைய எலான் மஸ்க்கை விட ரூ.3,295 கோடி அதிகம்.

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராவதற்காக ரூ.3 லட்சத்து 62,530 கோடியை அதில் முடக்கினார். அதனால், இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால், மஸ்க்கின் சொத்து மதிப்பு ரூ.16.47 லட்சம் கோடிக்கு கீழே சென்றுள்ளது.

எனினும், மஸ்க் தற்போது டெஸ்லா, ட்விட்டர், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங் மற்றும் தி போரிங் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் உரிமையாளராகவும் உள்ளார்.

-ராஜ்

28 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel