உலகின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை, பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டு பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி 11-வது இடத்திலும், கவுதம் அதானி 16-வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரா லிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்த்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். தற்போது பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் பிரெஞ்ச் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டு உள்ளார்.
அர்னால்டின் சொத்து மதிப்பு 207.8 பில்லியன் டாலராகவும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 204.7 பில்லியன் டாலராக உள்ளது.
இதனால், உலகின் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைக் கைப்பற்றினார் பெர்னார்ட் அர்னால்டு.
ரிலையன்ஸ்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11ஆம் இடத்திலும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 16ஆம் இடத்திலும் உள்ளனர்.
போர்ப்ஸ்அறிக்கைப்படி, உலகின் முதல் 10 பணக்காரர்கள்… பெர்னார்ட் அர்னால்டு (207.6 பில்லியன் டாலர்), எலான் மஸ்க் (204.7 பில்லியன் டாலர்), ஜெப் பெசோஸ் (181.3 பில்லியன் டாலர்), லாரி எலிசன் (142.2 பில்லியன்டாலர்), மார்க் ஜுக்கர்பெர்க் (139.1 பில்லியன் டாலர்), வாரன் பபெட் (127.2 பில்லியன் டாலர்), லாரி பேஜ் (127.1 பில்லியன் டாலர்), பில் கேட்ஸ் (122.9 பில்லியன் டாலர்), செர்ஜி பிரின் (121.7 பில்லியன் டாலர்), ஸ்டீவ் பால்மர் (118,8 பில்லியன் டாலர்).
கடந்த சில ஆண்டுகளாக பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்டு, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு : மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணி!
தேசிய நெடுஞ்சாலையில் சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
பியூட்டி டிப்ஸ்: பருவ வயதில் பருத்தொல்லை… தடுப்பது எப்படி?