ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கான ஒப்பந்தம் அக்டோபர் 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்த எலான் மஸ்க், பின்னர் கடந்த மே மாதம் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார்.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த உண்மையான தரவுகளை வெளியிட வேண்டும். போலி கணக்குகளால் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதனால் ட்விட்டருடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்று எலான் மஸ்க் அறிவித்தார்.
மேலும், ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனால் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
அக்டோபர் 17-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட 44 மில்லியன் டாலர் விலையில் ட்விட்டருடனான ஒப்பந்தத்தை முடிக்க விரும்புவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இரு தரப்பும் அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் இல்லை என்றால் நவம்பர் மாதம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமைக்குள் எலான் மஸ்க் 44 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என்றால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமைக்குள் ட்விட்டர் ஒப்பந்தத்தை வாங்குவதற்காக பல்வேறு முதலீட்டு நிறுவனங்களுடன் எலான் மஸ்க் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
செல்வம்
கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: கோவை விரைந்தது என்.ஐ.ஏ!
ஈஸ்டர் குண்டு வெடிப்பும்…கோவை கார் வெடிப்பும்…முபினின் பகீர் பின்னணி!