இஸ்ரேல் – ஹமாஸ்: போர் நிறுத்தத்துக்கு எகிப்தின் புதிய திட்டம்!

Published On:

| By Selvam

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த பேச்சு வார்த்தைக்கான புதிய திட்ட முன்மொழிவை இஸ்ரேல் – ஹமாஸ் இரு தரப்புக்கும் அளித்துள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

ஆறு மாத காலமாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் மத்தியஸ்தம் மேற்கொண்டுவரும் எகிப்து, கெய்ரோவில் இரு தரப்பு பிரதிநிதிகளிடம் இந்த உடன்படிக்கைக்கான முன்மொழிவு அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஆறு வாரத்துக்கான போர் நிறுத்தம், ஹமாஸ் பிணைக்கைதிகள் 40 பேர் விடுதலை, 700 பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஆகிய நிபந்தனைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இரு தரப்பினருமிடையே அவர்கள் விடுதலை செய்யவிருக்கும் கைதிகளின் பட்டியலை கேட்டுள்ளதாகவும் காஸாவில் போரினால் தெற்குப் பகுதி நோக்கி இடம்பெயர செய்யப்பட்ட பாலஸ்தீனர்கள் மீண்டும் வடக்குக் காஸாவுக்கு வருவதற்கான நிபந்தனையும் இந்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளதாகவும் எகிப்து தெரிவித்துள்ளது.

ஹமாஸ், இதைப் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.  இந்த முன்மொழிவின் முக்கிய விதிமுறைகளுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டால் நிரந்தர போர் நிறுத்தம் படிப்படியாக எட்டப்படும் என்று எகிப்து அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மல்ட்டி ஃப்ரூட் சாலட்

IPL 2024 : கடைசி ஓவரில் பதற வைத்த உனத்கட்… த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத்!

ரிலீசுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா..? மாஸ் காட்டும் ஜெயம் ரவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share