உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் படிப்பை முடித்த மாணவர்களுக்கான பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு University Grants Commission (யுஜிசி) தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் தற்காலிக சான்றிதழ்களில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆதார் எண்ணை அச்சிடுவதற்கு சில மாநில அரசுகள் பரிசீலனை செய்வதாக தகவல் வெளியான நிலையில், யுஜிசி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி பல்கலைக்கழகங்களுக்கு எழுதிய கடிதத்தில்உயர்கல்வி நிறுவனங்கள் ஆதார் ஆணைய விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்