பேடிஎம், கேஷ்ஃபிரி, ரேசார்பே அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

இந்தியா

சீன கடன் செயலிகள் வழக்குத் தொடர்பாகப் பெங்களூருவில் உள்ள பேடிஎம், கேஷ்ஃபிரி, ரேசார்பே அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சட்டவிரோத சீன கடன் செயலிகளின் மீதான விசாரணையின் ஒரு பகுதியாகப் பெங்களூருவில் உள்ள பேடிஎம், கேஷ்ஃபிரி, ரேசார்பே அலுவலகங்களில் நேற்று 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையைத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, இன்று (செப்டம்பர் 3) சோதனையின் முடிவில் சீன கட்டுப்பாட்டில் உள்ள வணிக அமைப்புகளின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த 17 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போலி இயக்குநர்களாக மாற்றிக் குற்றச் செயலுக்கு வழிவகுப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பேடிஎம், கேஷ்ஃபிரி, ரேசார்பே ஆகிய நிறுவனங்கள் சீன நபர்களால் இயக்கப்படுகின்றன எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் சட்டவிரோத வணிகத்தை பல்வேறு வணிக அடையாளங்கள், பேமெண்ட் கேட்வேகள், வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள் மூலம் செய்து வருகின்றன என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.

செல்போன் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துவதில் ஈடுபட்டது தொடர்பாகப் பெங்களூரு சைபர் போலீசார் பதிவு செய்த 18 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மோனிஷா

யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் இல்லை! – மத்திய நிதியமைச்சகம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *