தீபாவளிக்கு ED அதிகாரி அங்கித் திவாரி சொந்த ஊர் செல்ல அனுமதி!

இந்தியா

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தனது சொந்த ஊருக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த அரசு மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில், சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கக்கூடாது, அனுமதி பெறாமல் தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலங்களுக்கு செல்ல கூடாது. பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை சுட்டிக்காட்டி பிணை கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (அக்டோபர் 23) நீதிபதிகள் சூர்யகாந்த், தீபங்கர் தத்தா, உஜ்ஜல் புயான் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இடைக்காலமாக சொந்த ஊருக்கு அங்கீத் திவாரி சென்று திரும்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிது

அவர் மீண்டும் 9ஆம் தேதி சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் ரிப்போர்ட் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் அவர் தமிழ்நாட்டில் இருந்து தனது சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்துக்கு செல்லவுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

’கஜினி – 2’ வர வாய்ப்புண்டு – சூர்யா

சென்னை – திருச்சி பாலத்தில் விரிசலா? – வைரல் வீடியோ உண்மையா?

வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள்… வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி

+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0