அந்நிய செலாவணி விதிமீறல்கள் தொடர்பான வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஜாய் ஆலுக்காஸ் நகைக் குழுமத்தின் உரிமையாளர் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸின் ரூ.305.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஜாய் ஆலுக்காஸ் நிறுவனமானது இந்தியாவில் உள்ள முன்னணி நடைக்கடைகளில் ஒன்றாகும்.
இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் 85 ஷோரூம்கள் மற்றும் வெளிநாடுகளில் 45 ஷோரூம்கள் உள்ளன.

அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் இந்தியாவில் இருந்து ஹவாலா மூலம் துபாய்க்கு பணத்தை பரிமாற்றம் செய்து,
அங்குள்ள ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்தில் முதலீடு செய்தது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கேரளாவில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் அலுவலகம்,
மற்றும் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் வீடு உட்பட ஐந்து இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையின் அடிப்படையில் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸின் ரூ.305 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸிற்கு சொந்தமான ரூ.81.54 கோடி மதிப்பிலான கேரள மாநிலம் திருச்சூர் ஷோபா நகரில் உள்ள நிலம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் அடங்கிய 33 அசையா சொத்துக்கள்,
ரூ.91.22 கோடி மதிப்பிலான மூன்று வங்கிக் கணக்குகள், ரூ.5.58 கோடி மதிப்பிலான மூன்று நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் ரூ.217 கோடி மதிப்பிலான ஜாய் ஆலுக்காஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பங்குகள் ஆகியவற்றை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
செல்வம்