புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் இன்று (ஜனவரி 1) அதிகாலை 1.19 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் நேற்று (டிசம்பர் 31) மாலை முதல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கியது. பொதுமக்கள் கடற்கரை, தனியார் நட்சத்திர விடுதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி வந்தனர்.
இந்தநிலையில், இன்று அதிகாலை 1.19 மணியளவில் ஹரியானா மற்றும் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். ட்விட்டரில் #delhiearthquake என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் ஆனது.
ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் பகுதியின் 12 கி.மீ தொலைவில், 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாகத் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 3.8 ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் காயங்கள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாள மாநில எல்லையில் உத்தரகண்ட் மாநிலத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
தமிழுக்கு வெறும் ரூ.12 கோடி… அண்ணாமலை வாய் திறப்பாரா? – முத்தரசன்
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்வு: அரசாணை வெளியீடு