டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் மாலை 4.08 மணிக்கு ஏற்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் சற்று நேரத்திற்கு முன்னர் பலத்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மாலை 04.16 மணி அளவில் நேபாளத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் டெல்லியில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள லக்னோ, கோரக்பூர் நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் இருந்து வடக்கே 233 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை, நேபாளத்தில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 ரிக்டர் அளவாகப் பதிவான நிலநடுக்கத்தில் குறைந்தது 157 பேர் உயிரிழந்தனர். இது 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட நாட்டின் மிக மோசமான நிலநடுக்கம் ஆகும்.
சமூக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகளும் மக்கள் குடியிருப்பு கட்டிடங்களை விட்டு வெளியேறுவதைக் காட்டியது. உலகில் உள்ள டெக்டோனிக் மண்டலங்களில் ஒன்றாக இருப்பதால், நேபாளம் பூகம்பங்களால் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்முகப் பிரியா
கமலின் புதிய படத் தலைப்பு ‘தக் லைஃப்’!