பப்புவா நியூ கினியாவில் இன்று (மார்ச் 14 ) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (European Mediterranean Seismological Centre) தெரிவித்துள்ளது.
துருக்கியில் கடந்த மாத துவக்கத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.
குறிப்பாக துருக்கியில் சுமார் 10 மாகாணங்கள் நிலைகுலைந்தன. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நியூசிலாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் சில நாடுகளில் லேசான நிலநடுக்கங்களுமாக ஏற்பட்டது. துருக்கியில் கூட பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்கு பிறகு அவ்வப்போது பூமி குலுங்கி மக்களை அச்சப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 14 ) தென்மேற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் மேலும், இந்த நிலநடுக்கம் போர்ட் மோர்ஸ்பிக்கு வட- வடமேற்கில் 448 கிமீ (278 மைல்) தொலைவில் மற்றும் 200 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இதுவரை விடுக்கப்படவில்லை. மேலும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: தினை – தக்காளி வற்றல்
விவேக்கை நினைவுகூர்ந்த ரகுமான்