உயரும் பலி எண்ணிக்கை: சீனாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்!

Published On:

| By christopher

Earthquake in Jammu and Kashmir

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இன்று (டிசம்பர் 26) அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் அண்டை நாடான சீனாவில் கன்சூ மற்றும் கிங்காய் மாகாணத்திற்கு இடையே 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடும் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐயும் தாண்டியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கும் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அதிகாலை 4.33 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். கட்டடங்கள் குலுங்கியதால், உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி தெருவுக்கு ஓடி வந்துள்ளனர்.

எனினும் இதுவரை பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் வெப் சீரிஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment