ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 9) காலை 4.4 மற்றும் 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 55 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளன. இந்தியாவில் மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதுபோன்று ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத்தில் 6.7, 5, 5.2, 4.8 ரிக்டர் என அடுத்தடுத்து ஒரே நாளில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது அந்நாட்டு மக்களிடத்தில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று (மார்ச் 9) காலை 6.08 மணிக்கு ஆப்கானிஸ்தான் ஃபைசாபாத் நகரில் பூமிக்கடியில் 167 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 2வது முறையாக 7.06 மணிக்கு பூமிக்கடியில் இருந்து 107 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவாகப் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களிடம் பெறும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
ஜெயம் ரவி வெற்றிகரமான ஹீரோ தானா?!
சென்னையில் ரூ.430 கோடி மதிப்பில் கழிவறைகள்!