சட்டசபை தேர்தல்: 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் இலவச டிபன்!

Published On:

| By Monisha

Early Voters in Indore to get free poha jalebi

மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க வாக்குப்பதிவு அன்று காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களுக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காம்போ உணவு இலவசமாக வழங்கப்படும் என்று இந்தூரில் ’56 சப்பன் துக்கன்’ எனும் பல்வேறு உணவு வகைகள் விற்கும் உணவகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 17, மிசோரமில் நவம்பர் 7, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலங்கானாவில் நவம்பர் 30, சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17-ல் தேர்தல் நடத்தப்படுகிறது. ஐந்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்படும்.

இந்த நிலையில் மத்தியப்பிரதேசத்தில் வாக்குப்பதிவை ஊக்குவிக்க உணவகங்கள் புதுமையான முயற்சியை அறிவித்துள்ளன. அதன்படி நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அன்று காலை 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களுக்கு போஹா, ஜிலேபி அடங்கிய காம்போ இலவசமாக வழங்கப்படும் என்று இந்தூரில் ’56 சப்பன் துக்கன்’ எனும் பல்வேறு உணவு வகைகள் விற்கும் உணவகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

அதற்கு பின் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் 10 சதவிகிதம் சலுகை என்றும் அறிவித்துள்ளன. மக்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்காக இந்த சலுகையை அறிவித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

ராஜ்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

கிச்சன் கீர்த்தனா: மக்ரோனி சூப்

நானியின் “ஹாய் நான்னா” டீசர் வெளியானது: ஸ்பெஷல் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share