நிலத்தை கையகப்படுத்துவீர்களா? ஆட்சியரை விரட்டியடித்த கிராம மக்கள்!

இந்தியா

கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்ற ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்ட ஆட்சியராக பிரதீக் ஜெயின் பணியாற்றி வருகிறார்.

விகாராபாத் மாவட்டத்தில் ஒரு மருந்து நிறுவனம் அமைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்துவது அவசியம்.

ஆனால் மருந்து கம்பெனியை வரவிடமாட்டோம் ‘Go Back Pharma’ என்று வலியுறுத்தி ஹக்கிம்பேட்டா, போலேபள்ளி, ஆர்பி தாண்டா, புலிச்சேர்லா, மற்றும் ஏர்லபள்ளிதாண்டா ஆகிய கிராம மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 11) துடியாலா மண்டல் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆட்சியர் பிரதீக் ஜெயின் மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர்.

ஆனால் மருந்து நிறுவனத்தை அமைக்க விடவேமாட்டோம் என்று தெரிவித்த கிராம மக்கள், ஆட்சியர் பிரதீப் ஜெயின் மீதும் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
ஆட்சியரை தள்ளிவிட்ட போது, ஊழியர்கள் அவரை காப்பாற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இருந்தாலும் அத்திரம் அடையாத மக்கள் அதிகாரிகளின் கார்கள் மீது கற்கள் வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் அதிகாரிகளின் கார்கள்  கண்ணாடி  சுக்குநூறாக உடைந்தன. இந்தசூழலில் அங்கிருந்து ஆட்சியரின் கார் வேகமாக புறப்பட அங்கிருந்து மற்ற அதிகாரிகள் சென்றனர்.

இந்த தாக்குதலால் கோடங்கல் பகுதி மேம்பாட்டு ஆணைய அதிகாரி வெங்கட் ரெட்டி படுகாயம் அடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிகாரிகளை மக்கள் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் துடியாலா மண்டல் கிராமம் முழுவதும் பதற்றத்துடன் காணப்படுகிறது.

அதிகாரிகள் மீது தாக்கல் நடத்தப்பட்டது தொடர்பாக துடியாலா மண்டல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வங்கக் கடலில் புயல் சின்னம்… அலர்ட் மக்களே!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்… சாம்பியன் பட்டம் வென்றார் அரவிந்த் சிதம்பரம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0