பிரதமர் மோடி வீடு மீது பறந்த டிரோன்… தலைநகரில் பரபரப்பு!

இந்தியா

பிரதமர் மோடி இல்லத்தின் மீது இன்று (ஜுலை 3) அதிகாலையில் டிரோன் பறந்ததாக புகார் எழுந்த நிலையில் டெல்லி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மீதோ, அருகிலோ டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் 5.30 மணி அளவில் பிரதமர் மோடி இல்லத்தின் மீது டிரோன் பறப்பதாக டெல்லி போலீசாருக்கு பாதுகாப்பு படையினர் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை டிரோன் எதுவும் கண்டறியப்படவில்லை. பிரதமர் வீடு மீது டிரோன் பறந்ததாக எதுவும் பதிவாகவில்லை என்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கூறப்பட்டுள்ளது.

எனினும் பிரதமர் வீடு மீது பறந்ததாக கூறப்படும் டிரோனை தேடும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்று உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மாமன்னன் படம் குறித்து எடப்பாடி பதில்!

விம்பிள்டன்: பெடரர் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *