அரபிக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த கப்பல் மீது இன்று (டிசம்பர் 23) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சவுதியில் இருந்து மங்களூருவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு எம்.வி செம் ப்ளூடோ என்ற கப்பல் வந்து கொண்டிருந்தது. இந்த கப்பலானது அரபிக்கடலில் வந்து கொண்டிருந்த போது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போர்பந்தரில் இருந்து 217 நாட்டிக்கல் தொலைவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பலில் தீ பிடித்துள்ளது. இந்த தீயை கப்பலில் இருந்தவர்கள் அணைத்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் உள்ளவர்களை மீட்பதற்காக இந்தியக் கடற்படையின் விக்ரம் போர்க்கப்பல் விரைந்துள்ளது.
இந்த கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது இஸ்ரேலுடன் இணைந்த வணிக கப்பல் என்றும் அந்த கப்பலில் 20 இந்தியர்கள் உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குலுக்கும் ஈரானில் செயல்படும் புரட்சிப் படை அல்லது ஹவுதி தீவிரவாத குழுவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
லியோ முதல்நாள் வசூலை முறியடித்த சலார்!
இதுக்கொண்ணும் கொறைச்சல் கெடையாது… மும்பையை வறுக்கும் ரசிகர்கள்!