புதிதாக இயற்றப்பட்டுள்ள கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் லாரி ஒட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். drivers strike all over India
இந்திய தண்டனைச் சட்டம் 1960 என்பதை ’பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் 1898 என்பதை ’பாரதிய நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா’ எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872 என்பதை ’பாரதிய சாக்சியா’ எனவும் பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவிற்கு கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது 3 புதிய கிரிமினல் சட்டங்களும் நடைமுறையில் உள்ளன.
இதில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதாவது Hit and Run வழக்கில் குற்றம்சாட்டப்படும் வாகன ஓட்டிகளுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது
கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், சம்பவம் நடந்த உடன் அதை காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் தப்பித்தால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்று சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் முதல் ஆந்திரா வரை வணிக வாகன ஓட்டுநர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல மாநிலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல் நடைபெற்று வருகின்றன.
இதனால் பல மாநிலங்களில் உள்ள பெட்ரோல் பங்க்-களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பிக் கொண்டு செல்கின்றனர்.
பெரியளவில் போராட்டம் நடைபெற்று வருவதால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் ஜாமீன் ரத்து!
திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் : உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
drivers strike all over India