தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட்டின் பெயரை உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித் நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த நாள் (நவம்பர் 9 ஆம் தேதி) நீதிபதி சந்திரசூட் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார்.
தலைமை நீதிபதியாக, நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நவம்பர் 10, 2024 வரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இது ஒரு தலைமை நீதிபதிக்கான மிக நீண்ட பதவிக்காலங்களில் ஒன்றாகும்.
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சந்திரசூட்டுக்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாகனத்திற்கு பேன்சி எண் : ரூ. 8 லட்சம் வரை செலுத்த தயாரா?
சமந்தாவின் ‘யசோதா’ : ரிலீஸ் எப்போது?