பிப்ரவரி 18-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.
குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பின்பு திரவுபதி முர்மு முதல்முறையாக தமிழகம் வர உள்ளார்.
பிப்ரவரி 18-ஆம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் அவர், மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் அன்று மாலை மதுரையிலிருந்து கோவை செல்லும் திரவுபதி முர்மு, ஈஷா யோகா மையத்தின் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பிப்ரவரி 18-ஆம் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் திரவுபதி முர்மு டெல்லி திரும்புகிறார்.
குடியரசு தலைவர் வருகையால் மாநில காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
செல்வம்
`அப்பா அம்மா செய்த புண்ணியம்`: இளையராஜா பற்றி சூரி
“8 கோடி மக்கள் பாராட்டும் அரசாக அமைய வேண்டும்”: ஸ்டாலின்