பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து!

இந்தியா

இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இன்று (ஜூன் 29) இந்தியா முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஈத்-உஸ்-சுஹா என்பது அன்பு தியாகத்தின் புனித பண்டிகையாகும். இந்த கொண்டாட்டத்தில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் அதிகரிக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்.

பிரதமர் மோடி

பக்ரீத் புனித பண்டிகை இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தியாகம், கருணை ஆகியவற்றின் மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகிறது.

முதல்வர் ஸ்டாலின்

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்புநெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவி விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனிதநேயமும் தழைத்தோங்க வேண்டும்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

இறைத்தூதரின் தியாகங்களை நினைவு கூறுவதன் மூலமாக நாட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும் தடைக்கற்களாக விளங்குகின்ற ஆணவம், அநீதி, துரோகம், சூழ்ச்சி, ஆகியவை ஒழிந்து நல்ல எண்ணங்களும், மனித நேயமும் தழைத்தோங்கும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொண்டாடும் தியாக திருநாளாம் பக்ரீத் திருநாளில் முஸ்லிம் பெருமக்கள் அனைவருக்கும் இதயமார்ந்த நல்வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்

இறைவனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும் இஸ்லாமியர்களின் தியாகத்தை போற்றும் திருநாளான பக்ரீத் திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

இல்லாதோருக்கு இயன்றதை கொடுங்களென வலியுறுத்தும் தியாக திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகள்.

செல்வம்

தக்காளி விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலை தோசை

modi greets bakrid wishes
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *