கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி நேற்று (மே 2) பள்ளி குழந்தைகளுடன் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்த மாவட்டமான கர்நாடகாவின் கல்புர்கியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரோட்ஷோ நடத்தினார்.
அப்போது அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கின் அருகே பிரதமரை பார்ப்பதற்காக குழந்தைகள் தடுப்புக்கு வெளியே காத்திருந்தனர். அவர்கள் அருகில் சென்ற பிரதமர் மோடி சிறிது நேரம் அவர்களுடன் உரையாடினார்.
நீங்கள் என்ன படிக்கிறீர்கள். எதிர்காலத்தில் என்ன வேலைக்குப் போகப் போகிறீர்கள் உங்களின் இலக்கு என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு டாக்டர், போலீஸ், பிரதமரின் செயலாளர் எனக் குழந்தைகள் பதில் அளித்தனர்.
அதற்குப் பிரதமர் மோடி நீங்கள் யாரும் பிரதமராக விரும்பவில்லையா? என்று கேள்வி எழுப்பிச் சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
விபூதி கவரில் அன்னை தெரசா: சிவாச்சாரியார்கள் சஸ்பெண்ட்!
திக் திக் நிமிடங்கள்: டெல்லி அணி த்ரில் வெற்றி!