நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் சீக்கியர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு எச்சரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக கடந்த சில வாரங்களில் அதிகளவு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மிரட்டல்கள் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் விமான நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் வருகிற நவம்பர் மாதம் யாரும் பயணிக்க வேண்டாம் என காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு எச்சரித்து உள்ளார்.
தீவிரவாதியின் இந்த எச்சரிக்கை பதற்றத்தை அதிகாித்துள்ளது. இதுகுறித்து குர்பத்வந்த் சிங் பண்ணு கூறுகையில், “சீக்கியர்கள் படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நவம்பம் மாதம் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் சீக்கியர்கள் பயணிக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
இவரது வெளிப்படையான எச்சரிக்கையால் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி தன்னுடைய இரண்டு சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, நவம்பர் 1 முதல் நவம்பர் 4 வரையான நான்கு நாட்களில் டெல்லியில் மட்டும் 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் வீடுகள் , சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையொட்டிதான், தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணு எச்சரித்ததாக கூறப்படுகிறது. இவர், கடந்த ஆண்டும் இதே போல எச்சரிக்கை விடுத்திருந்தார் .
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பாம்பு விஷத்தை கலக்கி பெண்ணை படைத்தார் பிரம்மன் – நடிகை தீபா சங்கர்
அதிமுகவில் கெளதமிக்கு முக்கிய பொறுப்பு!