“வயநாடு நிலச்சரிவு பகுதிக்கு தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பேரிடர் பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டாம்” என பொதுமக்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் நேற்று அதிகாலையில் நடந்த நிலச்சரிவில் மேப்பாடு, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள் மண்ணில் புதையுண்டன. இதுவரை அங்கு பலியானோரின் 160ஐ தாண்டியுள்ளது. 1,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 180க்கும் மேற்பட்டோரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
அப்பகுதியில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களையும், சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டதால் கட்டிடங்களில் ஒதுங்கி நிற்பவர்களையும் மீட்கும் பணியில் தேசிய மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர், “வயநாட்டில் நடந்திருப்பது சொல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான பேரிடர். இந்தப் பகுதியில் மீட்புப் பணிக்கு இடையூறாக, பார்வையாளர்களாக நிற்கும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
பேரிடர் பகுதிகளுக்கு வாகனங்களில் தேவையில்லாமல் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேவையற்ற இந்த பயணங்களால் மீட்புப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களின் போக்குவரத்து மற்றும் மீட்பு பணிகள் பாதிக்கப்படுகிறது. இதை ஒட்டுமொத்த சமுதாயத்தின் பொறுப்பாக உணர்ந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.” என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல் காந்தியின் சாதி… ’அனுராக் சர்ச்சை பேச்சு : ஷேர் செய்த மோடி – காங்கிரஸ் பதிலடி!