அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் 270 என்ற இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்று விட்டார். அமெரிக்க அதிபராக பெண் ஒருவர் பதவியேற்கும் வாய்ப்பு இந்த முறையும் நழுவியுள்ளது.
தேர்தல் வெற்றிக்கு பிறகு, இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்தப் பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள் என்று டிரம்ப் பேசினார்.
இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராகியுள்ள டொனால்ட் டிரம்ப்தான் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக சொத்து மதிப்பு கொண்டவர். கிட்டத்தட்ட 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அவருக்கு சொத்து உள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 43 ஆயிரம் கோடி அவருக்கு சொத்து இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான போது அவருக்கு 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டொனால்ட் டிரம்பின் நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது.
டொனால்ட் டிரம்புக்கு முன்னதாக பணக்கார அமெரிக்க அதிபராக ஜான் எப். கென்னடி கருதப்பட்டார். இவருக்கு கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடி சொத்து இருந்தது. பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இவர் ஈடுபட்டு வந்தார். அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியான இவர், 1963 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“விஜய் அரசியலுக்கு வந்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை” : ரஜினி சகோதரர் பேட்டி!
யாரும் எதிர்பாராதா வீழ்ச்சி… தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!