Doctors performing surgery on floors in gaza

மருத்துவமனை பிளாட்பாரத்தில் மயக்க மருந்து இல்லாமல் ஆபரேஷன்: காசா கொடுமை!

இந்தியா

இந்திய நேரப்படி அக்டோபர் 17 ஆம் தேதி இரவு காசா  அல் அஹ்லி மருத்துவமனையில் இஸ்ரேல் வான் வழித் தாக்குதலால், சிகிச்சை பெற்று வந்த சுமார் 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். இது உலகம் முழுக்க கவலையையும், கண்டனத்தையும் உருவாக்கியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம், பிரதமர், அதிபர் ஆகியோர் இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் ஐ.நா.வின் முன்னாள் ஊழியர்களோ இதை இஸ்ரேல்தான் செய்திருக்கிறது என்று கூறியுள்ளார்கள்.

தாக்குதலுக்குள்ளான அல்-அஹ்லி அரபுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 500 குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்ட நிலையில்…

இந்தத் தாக்குதலையடுத்து அங்கே சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களை  ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் கார்கள் மூலம்  காசா நகரின் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுவரை சுமார் 350 பேர் இவ்வாறு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.,

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் காயமடைந்தவர்கள் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருதாக அதன் இயக்குனர் முகமது அபு செல்மியா கூறினார்.

தாக்குதலுக்கு உள்ளான அல் அஹ்லி மருத்துவமனையில் இருந்து, அல் ஷிபா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்கள் பயங்கரமான காயங்களுடன் வந்து சேர்ந்ததாக காசாவில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்தார்.

கடுமையான காயங்களுடன் வந்து சேர்ந்தவர்களைப் பார்த்து அல் ஷிபா மருத்துவமனை மருத்துவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், அல் ஷிபா மருத்துவமனையில் ஏற்கனவே  படுக்கைகளோ, மருத்துவ உபகரணங்களோ, மருந்துகளோ இல்லை.  அல் ஷிபா மருத்துவமனையின் பிளாட் பாரங்களில், வராண்டாக்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்தும் இல்லை. இதனால் மயக்க மருந்து இல்லாமலேயே பிளாட் பாரங்களில் அறுவை சிகிச்சை செய்து வருகிறார்கள் காசா மருத்துவர்கள்.

“ஏவுகணை தாக்குதலால் அந்த மருத்துவமனையில் இருந்து கை, கால்கள் இல்லாமல், குடல் அறுந்துபோய் என கொடூரமான நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு பலர் கொண்டுவரப்பட்டுள்ளனர். இங்கே எங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் தேவை, எங்களுக்கு மருந்து தேவை, எங்களுக்கு படுக்கைகள் தேவை, எங்களுக்கு மயக்க மருந்து தேவை, எங்களுக்கு எல்லாம் தேவை” என்று காசாவில் உள்ள ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் அபு செல்மியா அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் உருக்கமாகக்  கூறியிருக்கிறார்.

காசா மக்களின் நிலைமை மிக பரிதாபகரமானதாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

மனிதம் மரத்து போய்விட்டதா?: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்!

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *