ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் ரூ.30,000: மருத்துவர் கைது!

இந்தியா

ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் ரூ.30,000 வசூல் செய்து கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்பு செயலில் ஈடுபட்ட மருத்துவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மருத்துவமனையின் மேலாளர் மற்றும் வரவேற்பாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த மருத்துவர் சந்தன் பல்லால் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 900 சட்டவிரோத கருக்கலைப்புகளை செய்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவருடன் அவரின் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிசார் ஆகியோர் ஒவ்வொரு கருக்கலைப்புக்கும் ரூ.30,000 வசூலித்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவமனையின் மேலாளர் மீனா, வரவேற்பாளர் ரிஸ்மா கான், மருத்துவர் சந்தன் பல்லால், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் நிசார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும், சந்தேக நபர்களை  பிடிக்க அடுத்தகட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பூ சீரகக் கஞ்சி

பேசுவது பிரபாகரன் மகள் துவாரகாவா?

மூன்று வரிசை… முதல்வர் தோரணை! குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி பிறந்தநாள் விழா!

இதுக்கு எதுக்கு அவங்க வைல்டு கார்டு எண்ட்ரியா வரணும்?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *