what is the most ordered food of the year?
இந்தியா முழுவதும் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு எது என்பதை பிரபல தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி தொடர்ந்து எட்டாவது ஆண்டாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் உணவுகளில் தொடர்ந்து பிரியாணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தனியார் உணவு டெலிவரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த ஆண்டு வீடு தேடி வரும் உணவுகளில் பிரியாணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. எட்டாவது ஆண்டாக பிரியாணியே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த ஆண்டில் ஒரு விநாடிக்கு 2.5 பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. ஒவ்வொரு 5.5 சிக்கன் பிரியாணிக்கும் ஒரு வெஜ் பிரியாணி வீதம் ஆர்டர் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி மட்டும் 4.30 லட்சம் பிரியாணிகள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்பட்டன. மேலும் ஆறு பிரியாணிகளில் ஒரு பிரியாணி ஹைதராபாத்தில் இருந்து ஆர்டர் பெறப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஹைதராபாத் மக்களின் பிரியாணி மீதான மோகம் குறையவில்லை என்பது தெரிகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
செல்வம்