2019 -20 ஆம் நிதியாண்டில் ஏழு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசின் கடன் தொகை இருமடங்காகி 15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர், இந்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பெற்றிருக்கக்கூடிய கடன்கள் தொடர்பாகவும்,
அதில் திருப்பி செலுத்தி இருக்கக்கூடிய கடன் மற்றும் செலுத்த வேண்டிய வட்டி விகிதம், மேலும் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன் விவரங்கள் தொடர்பாகவும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இந்திய அரசு 2021-2022ம் நிதியாண்டில் 12.14 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
இதில் 3 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தி உள்ளதாகவும், நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டி 5.75 லட்சம் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் 2022-2023ம் நிதி ஆண்டில் இந்திய அரசு 8.40 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.
இதில் 2.39 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தி உள்ளதாகவும், நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டி 3.09 லட்சம் கோடி எனவும் அவர் கூறியுள்ளார்.
இதைப்போல் மாநில அரசுகள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, தமிழக அரசு கடந்த 2019-20ம் நிதியாண்டில் 1,990 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில்,
2020-2021ம் நிதியாண்டில் 10,952 கோடி ரூபாயும், 2021-2022 நிதியாண்டில் 13,511 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது
அதாவது 2021 தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசு வெளிச்சந்தை மற்றும் மத்திய அரசிடம் இருந்து பெரும் கடன் வீதம் கணிசமாக அதிகரித்து வருவது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கலை.ரா
போராட்டம் தொடரும்: பேச்சுவார்த்தைக்கு பின் பரந்தூர் போராட்டக்குழு அறிவிப்பு!
திமுக எம்பி கேள்வி: தமிழிலேயே பதிலளித்த நிர்மலா சீதாராமன்