இந்திய மருந்தியல் ஆணையம் குறிப்பிட்ட ஒரு மாத்திரையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெஃப்டல் 500 மாத்திரை (Meftal Tablet) மாதவிடாய் வலி, தலைவலி, தசை வலி, மூட்டு வலி, அல்லது பல் வலி போன்ற வலிகளுக்கு நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்தங்களில் இந்த மாத்திரையை வாங்கலாம்.
இந்நிலையில் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக இந்திய மருந்தியல் ஆணையம் எச்சரித்துள்ளது.
மெஃப்டால் ஸ்பாஸ் மாத்திரை என்பது டைசைக்ளோமைன் மற்றும் மெஃபெனாமிக் அமிலம் ஆகிய இரண்டு மருந்துகளின் கலவையாகும்.
இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் , DRESS சிண்ட்ரோம் போன்ற கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தூண்டுகிறது. உடலின் உள் உறுப்புகளைப் பாதிக்கிறது என்று மருந்துப் பொருட்களில் உள்ள எதிர்வினைகள் மற்றும் பாதகங்களைக் குறித்து ஆய்வு செய்யும் இந்திய பார்மாகோவிஜிலன்ஸ் திட்ட (PvPI) ஆய்வில் தெரியவந்துள்ளது.
DRESS சிண்ட்ரோம் (Drug Reaction with Eosinophilia and Systemic Symptoms) என்பது உடலில் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்துவது ஆகும். சில மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், தோல் வெடிப்பு, ரத்தக்கசிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டு முதல் எட்டு வாரங்களுக்குப் பிறகு இந்த பாதிப்புகள் வெளிப்படும். இதன் காரணமாக 10 சதவிகிதம் வரை இறப்பு விகிதம் இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மெஃப்டால் எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ரத்தத்தில் அளவுக்கு அதிகமான வெள்ளை அணுக்கள் (Eosinophils) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய மருந்தியல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே மருத்துவர்கள் பரிந்துரையின்றி வலி எடுக்கும்போதெல்லாம் இந்த மருந்தை அடிக்கடி வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று எச்சரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெள்ளம் வடிந்துவிட்டாலும் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? – சுகாதாரத்துறையின் ஆலோசனைகள்!
மழை பாதிப்புக்கு திமுக அரசே பொறுப்பு: எடப்பாடி தாக்கு!
Appuram ethuku da, indha tablets ellam prescripe panrenga