ஈரான் செல்ல வேண்டாம் : இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை எச்சரிக்கை!

இந்தியா

இந்தியர்கள் ஈரான் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்பட இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளையும் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.  இதில் டெல் அவிவைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்தால் இன்னும் உக்கிரமாக தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ள ஈரான் இந்த சண்டையில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

இந்தநிலையில் ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்றும் ஓரிரு தினங்களில் இந்த தாக்குதல் தொடங்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதையொட்டி தெற்கு லெபனான் பகுதியில் உள்ள 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

அதேசமயம் இஸ்ரேலின் ஹைபா நகரின் வடக்கே உள்ள பகுதிகளை குறிவைத்து இன்று மிகப்பெரிய ஏவுகணை ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லாஅமைப்பு அறிவித்துள்ளது.

இப்படி மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று (அக்டோபர் 2) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

அதில், “ மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் பாதுகாப்புச் சூழலை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்திய குடிமக்கள், ஈரானுக்கான அத்தியாவசிமற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

பயணிகள் கவனத்திற்கு… விமான சேவைகளில் மாற்றம் – முழு விவரம் இதோ!

99 ரூபாய்க்கு மது பாட்டில் விற்பனை… ஜாலி மூடில் ஆந்திர குடிமகன்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *