தீபாவளி தள்ளுபடி விலையில் லக்‌ஸூரி கார்கள்… முழு விவரம் இதோ!

Published On:

| By Selvam

கார் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது பல்வேறு மாடல்களுக்கும் ஆயிரங்களில் அல்ல லட்சங்களில் தள்ளுபடி அறிவித்திருக்கின்றன.

கொரோனா பொது முடக்கத்தின்போது மிகவும் பெரிய சவாலை எதிர்கொண்ட கார் உற்பத்தி நிறுவனங்கள், பொது முடக்கத்துக்குப் பிறகு 2021-ம் ஆண்டு தங்களது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து ஒரு சீரான வளர்ச்சியை சந்தித்து வந்தாலும், இதற்கு முன் இருந்திராதவகையில், இந்த ஆண்டு, புதிதாக வரும் வாகனங்களை வாங்குவதில், மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், மாருதி சுசூகி, ஹோன்டா, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள்,  ஆடி, மெர்சிடிஸ் – பென்ஸ், பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களுக்கும் தள்ளுபடி அறிவித்து மக்களுக்கு பேரதிர்ச்சியை அளித்திருக்கின்றன. கார்களில் அதிகம் விரும்பப்படும் ஆடம்பர ஆடி க்யூ8 இ-டிரான் ரூ.10 லட்சம் தள்ளுபடியைப் பெறும்.

இந்த தள்ளுபடியானது கடை விலையில் வழங்கப்படுகிறது. கியா இவி6 வகை கார்களுக்கு 12 லட்சமும், சுசூகி ஜிம்னி கார்களின் விலையில் தோராயமாக ரூ.2.3 லட்சமும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுசூகியின் மிகவும் பிரபலமான ஜிம்னி கார், ஏனோ, நாட்டின் மிக முன்னனி கார் உற்பத்தி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற புகழைப் பெறத் தவறிவிட்டதால், இப்போது, அதிக தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இது ஏதோ வழக்கமான கார்களுக்கு மட்டுமல்ல, விற்பனையில் படுஜோராக இருக்கும் டோயோடோ இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் மஹிந்திரா 3-டோர் தார் வகை கார்களும் கூட மிகப்பெரிய தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்திருப்பது, கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த தீபாவளியை மறக்க முடியாத தீபாவளியாக மாற்றக் காத்திருக்கிறது.

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி400 மாடல் வகை மின்சார காருக்கு மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றல்ல, இரண்டல்ல ரு.3 லட்சம் விலை தள்ளுபடியில் இந்த காரை வாங்கலாம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கடந்த ஜூலையில்தான் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி 700 மாடல் காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கார் உற்பத்தி துறை தொடர்பான தரவுகளை கணிக்கும் நிபுணர்கள், “தீபாவளிக்குப் பிறகுதான் இந்த தள்ளுபடி இன்னும்கூட அதிகரிக்கும், ஏனென்றால், டீலர்களும், கார் உற்பத்தி நிறுவனங்களும், புதிய நவீன உற்பத்தியைத் தொடங்கவும், ஏற்கனவே விற்பனையாகாமல் இருக்கும் கார்களை விற்கவும் இதுபோன்ற தள்ளுபடிகளை மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், “டீலர்களும், நிறுவனங்களும் மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்தாலும், அதில் சில நிபந்தனைகளும் இருக்கலாம். கிரெடிட் ஸ்கோர், சில குறிப்பிட்ட நிதி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு என சில நிபந்தனைகள் அல்லது ஒரு சில நிபந்தனைகள் இணைந்து இருந்தால் இந்த தள்ளுபடிகள் கிடைக்கலாம் என்று அறிவிக்கலாம். அதையும் கார்களை தேர்வு செய்வோர் கவனமாக தேர்வு செய்வது அவசியம்” என்று எச்சரிக்கிறார்கள்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: வேளச்சேரி – பீச் ரயில் சேவை முதல் ராகவா லாரன்ஸ் படம் அப்டேட் வரை!

கிச்சன் கீர்த்தனா: சோமாஸ்

விஜய் மாநாட்டில் கவனம் ஈர்த்த தொகுப்பாளினி: யார் இவர்?

“காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை” : செல்வப்பெருந்தகை

Diwali Discount Offer on Cars

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share