ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அரசுத் துறைகளில் மிக முக்கியமானதாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை இன்று (அக்டோபர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் 11.27 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக தேவாங்கு சரணாலயம்: தமிழக அரசு உத்தரவு!
பண மதிப்பிழப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!