சர்ச் வளாகத்துக்குள் கிடைத்த சிவலிங்கம்!

Published On:

| By Kumaresan M

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா என்ற இடத்தில் கத்தோலிக்க சைரோ மலபார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்துக்குள் பிஷப் வசிக்கும் பங்களாவும் உள்ளது. இந்த பங்களாவில் மாதுளை மரம் நடுவதற்காக கடந்த 14 ஆம் தேதி பள்ளம் தோண்டியுள்ளனர்.

அப்போது, திடீரென்று சிவலிங்கம் ஒன்று தென்பட்டுள்ளது. இதையடுத்து, சிவலிங்கத்தை எடுத்து வெளியே கொண்டு வந்தனர். அதோடு , பார்வதி சிலை ஒன்றும் கிடைத்தது. மற்றும் பழங்கால பூஜை பொருட்களும் கிடைத்தன. Discovery of idol from Church land

தொடர்ந்து பிஷப் தரப்பில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் கோட்டயம் மாவட்டம் தலைவரான ரவீந்தரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் அங்கு சென்று அந்த சிலைகளை பார்வையிட்டார். அருகே வசிக்கும் இந்து மக்களும் பூமியில் இருந்து கிடைத்த சிலைகளை பக்தி பரவசத்துடன் பார்த்து சென்றனர். பின்னர், பிஷப் பங்களா வளாகத்திலேயே சிறிய பூஜை செய்யப்பட்டு அந்த சிவலிங்கம் எடுத்து செல்லப்பட்டது. Discovery of idol from Church land

பிஷப் பங்களாவுக்கு அருகேயே உள்ள வெள்ளப்பாடு பகவதி அம்மன் கோவிலில் சிவலிங்கம்,பார்வதி சிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது பிஷப் வசிக்கும் பங்களாவில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமண குடும்பம் ஒன்று வசித்ததாகவும், அவர்கள் இந்த சிவலிங்கத்தை பூஜித்து வந்திருக்கலாம் என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share