நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூல் 24% அதிகரிப்பு!

2023  பிப்ரவரி 10  வரையிலான மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 24.09 சதவிகிதம் அதிகமாகும்.

இந்தத் தகவலை வெளியிட்டுள்ள ஒன்றிய நிதி அமைச்சகம், ‘2023  பிப்ரவரி 10 வரையிலான நேரடி வரி வசூல்களின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைக் காட்டுகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும்.

இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ, சுமத்தவோ முடியாது.

உதாரணமாக, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான வரிகளையும் செலுத்துவார்கள்.

அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.

அந்த வகையில் 2023 பிப்ரவரி 10, வரையிலான மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 24.09 சதவிகிதம் அதிகமாகும்.

வரி செலுத்துவோருக்கு திருப்பி அளிக்கப்பட்ட நிகர தொகை தவிர்த்த நேரடி வரி வசூல் ரூ.12.98 லட்சம் கோடியாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 18.40 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவீதம் மற்றும் நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவிகிதம் ஆகும்.

மொத்த வருவாய் அடிப்படையில் கார்ப்பரேட் வருமான வரி (சிஐடி) மற்றும் தனிநபர் வருமான வரி (பிஐடி) ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை,

சிஐடி-யின் வளர்ச்சி விகிதம் 19.33 சதவிகிதம் ஆகவும், பிஐடி-யின் (பங்கு பரிவர்த்தனை வரியான எஸ்டிடி உட்பட) வளர்ச்சி விகிதம் 29.63சதவிகிதம் ஆகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ராஜ்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா – சம்மர் ஸ்பெஷல்: வற்றல், வடாகம் போடப்போறீங்களா… ஒரு நிமிஷம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts