காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கார்கேவுக்காக விலகிய திக் விஜய் சிங்

இந்தியா


காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில், இறுதி நேரத்தில் ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் நடந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முதலில் கட்சியின் சார்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அவர் தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்காததால் தலைவர் பதவிக்கான ரேஸில் இருந்து விலகினார்.

இதையடுத்து நேற்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனு படிவத்தையும் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து பெற்றுச் சென்றார்.

அதுபோன்று திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூரும் தலைவர் போட்டிக்கான ரேஸில் உள்ளார்.

திக் விஜய் சிங்கும், சசி தரூரும் ஒருவரை ஒருவர் சந்தித்து போட்டியில் பெற்றி பெற வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 30) காலை முதல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடத் தலைமை விரும்புவதாகத் தகவல் வெளியானது.

மல்லிகார்ஜுன கார்கே சோனியா காந்தியை இன்று காலை சந்தித்தார். அதன் பிறகு அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

தான் போட்டியிடுவதற்குப் பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக முன்மொழிவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று பேசியுள்ள அவர், “தனது வாழ்நாள் முழுக்க காங்கிரஸுக்காக உழைப்பேன். கார்கே என்னுடைய தலைவர் மற்றும் என்னை விட மூத்தவர். அவரை நேற்று சந்தித்து தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்று கேட்டேன். அவர் இல்லை என்று சொன்னார்.

இன்று மீண்டும் அவரை சந்தித்தேன். நீங்கள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் எனது ஆதரவை முழுமையாகத் தெரிவிப்பேன் என்று கார்கேவிடம் கூறினேன்.
அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சசி தரூர் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

பிரியா

திமுக அமைச்சர்களை கடுமையாக சாடிய குஷ்பு

அதிமுக பொதுச்செயலாளார் தேர்தல் நடத்த தடை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *