உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்கும் டென்மார்க்

இந்தியா

உக்ரைனுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக டென்மார்க் ராணுவ மந்திரி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தப் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி டிரோல்ஸ் லண்ட் பால்சன், “உக்ரைன்-ரஷ்யா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பை கவனிக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

எனவே உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசு தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

எஃப் 16 போர் விமானம் ஒற்றை இருக்கை, ஒற்றை எஞ்சின் கொண்ட ஜெட் விமானம். ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியது மற்றும் பலவிதமான ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது!

‘சாமானியன்’ பட டைட்டில்…தயாரிப்பாளர் மதியழகன் சொன்ன முக்கிய தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *